கப்டன் பண்டிதரின் 37ஆவது நினைவு நாள் அவரது இல்லத்தில் அனுஷ்டிப்பு!
வல்வெட்டித்துறை பகுதியில், தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 37 ஆம் ஆண்டு நினைவு தினம் அவரது இல்லத்தில் நேற்று (09) அனுஷ்டிக்கப்பட்டது.
அன்னாரின் வீட்டில், அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது .
இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம். கே.சிவாஜிலிங்கம், மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், வரதராஜன் பார்த்திபன், வீரா ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அத்துடன் , வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள், மற்றும் குடும்பத்தாரும் இணைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து பண்டிதரின் தாயாரினால் மதிய போசனமும் வழங்கப்பட்டது .
கடந்த 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி அச்சுவேலியில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமை படையினர் முற்றுகையிட்டதால் ஏற்பட்ட சமரில் கப்டன் பண்டிதர் உட்பட பல போராளிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை