அதிகளவான பெண்களைக் கூட்டி யால காட்டிற்குள் நடந்த யாகம்! இளம் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் செயல் அம்பலம்
யால தேசிய பூங்காவின் வனப் பகுதியில் அதிகளவான பெண்களை கூட்டி யாகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யாகத்தினை சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இளம் இராஜாங்க அமைச்சர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யால வன விலங்கு பூங்காவில் ஒரு பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி இரவு இராஜாங்க அமைச்சர் யாகம் ஒன்றை நடத்தியுள்ளார்.
தந்தை வழியில் அரசியலுக்குள் பிரவேசித்த இந்த இராஜாங்க அமைச்சர், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது பதவி உயர்வை எதிர்பார்த்து அல்லது வேறு ஒரு காரணத்திற்காக இந்த யாகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த யாகத்தில் பூசாரிகள், இராஜாங்க அமைச்சரின் தந்தை, சகோதரர்கள் சிலரும், குடும்பத்துடன் நெருக்கமான பெண்களும் கலந்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாகத்தில் அதிகளவான பெண்களை கலந்துக்கொள்ள செய்வது யாகம் வெற்றி பெற உதவும் என பூசாரிகள் கூறியுள்ளதன் காரணமாகவே அந்த யாகத்தில் அதிகளவில் பெண்கள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த யாகம் அதிகாலை 2.30 வரை நடைபெற்றதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்த போதிலும் மாலை 6 மணிக்கு பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யால வனத்திற்குள் செல்ல வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை