• Breaking News

    கச்சதீவுக்கு சென்றாரா சீன தூதுவர்?

     


    சீனத் தூதுவர் குய் ஸின்ஹொங் கச்சதீவிற்கு விஜயம் செய்தார் என இந்திய ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் செய்தி பொய்யானது என இலங்கைக்கான சீனத்தூதரகம் அறிவித்துள்ளது.

    கடந்த 17ம் திகதி சீனத் தூதுவர், வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

    இதன்போது, சீனத்தூதுவர் தலைமன்னாருக்கு விஜயம் செய்ததாகவும், இலங்கைக்கு சொந்தமான சில மணல்குன்றுகளை அவர் இந்தப் படகுப் பயணத்தின் போது பார்வையிட்டதாகவும் இலங்கைக் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

    எனினும், சீனத்தூதுவர் கச்சதீவிற்கு சென்றதாகவும் தீவின் பகுதிகளை ட்ரோன் மூலம் படமெடுத்தார் எனவும் தமிழக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என சீனத்தூதரகம் மறுத்துள்ளது.

    இதேவேளை, சீனத்தூதுவர் கச்சதீவிற்கு விஜயம் செய்யவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad