செம்மணியில் விபத்து - இருவர் மருத்துவமனையில் அனுமதிப்பு!
இன்று மதியம் செம்மணியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
நாவல்குழியைச் சேர்ந்த 23 மற்றும் 26 வயதுடைய இருவர் மோட்டார் சைக்கிளில் செம்மணி வீதியால் பயணித்துக் கொண்டிருந்தனர்.
இதன்போது அவ்வீதியால் வந்த டிப்பர் அவர்களை மோதித்தள்ளியது.
இந்நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துகள் இல்லை