டிக் டொக் சர்ச்சை! - கொழும்பில் குத்திக்கொல்லப்பட்ட இளைஞன்
கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் இளைஞர் ஒருவர் குத்திக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
17 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டிக் டொக் காணொளி தொடர்பான தகராறில் குறித்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாதம்பிட்டிய லேனில் வைத்து குறித்த இளைஞரை கத்தியால் குத்தியதாகவும், இதனையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபரும் மேலும் இருவர் ரண்திய உயன வீட்டுத் தொகுதியை நோக்கி பயணித்ததாகவும், டிக் டொக் காணொளி தொடர்பாக ஒரு குழுவினர் அவர்களை தாக்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர், பாதிக்கப்பட்ட நபரை கத்தியால் குத்தியதுடன், சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை