• Breaking News

    யாழில் கிணற்றில் தவறிவிழுந்த குழந்தை சடலமாக மீட்பு!

     


    யாழ்ப்பாணத்தில் கிணற்றில் தவறி விழந்த குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஊர்காவற்றுறை, நாரந்தனை பகுதியை சேர்ந்த நான்கு வயதான ஆரணன் விஜேந்திரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

    இந்த துயரச் சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாக கிணற்றில் வீழ்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    குறித்த குழந்தையின் இறுதி நிகழ்வு இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad