பாடசாலை மாணவிகளுக்கு அந்தரங்க பகுதியை காண்பித்த பொலிஸ் உத்தியோகத்தர் அதிரடியாக கைது!
பாணந்துறை பகுதியில் இரண்டு பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்ததாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரகஹஹேன பகுதியைச் சேர்ந்த 36 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் காரில் இருந்தவாறு, அந்த பகுதியாக சென்ற பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்துள்ளதாக முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பாடசாலை மாணவிகள் தனது அதிபரை தெளிவூட்டிய நிலையில், சம்பவம் தொடர்பில் அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
இந்த பகுதியிலுள்ள சிசிடிவி கெமராவை ஆய்வு செய்த நிலையில், சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை