வவுனியா மதுபான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!
வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள பிரபல மதுபான நிலையத்தில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 3.50 மணியளவில் குறித்த நிலையத்தில் தீ பற்றிய நிலையில் வவுனியா நகரசபை தீ அணைக்கும் பிரிவினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டும் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தீ கட்டிடம் முழுவதும் பரவியது.
தீ விபத்து தொடர்பில் வவுனியா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை