யாழ்/ வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்!
12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு covid-19 வைரஸ் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு யாழில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
அந்தவகையில் யாழில் பல்வேறு பாடசாலைகளிலும் இன்றையதினம் மாணவர்களுக்கான தடுப்பு ஊசி ஏற்றப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் தேசிய பாடசாலையான யாழ்/ வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியிலும் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு இன்றையதினம், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பொன்னுத்துரை ஜெசிதரன் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆனந்தராசா ஆகியோரது கண்காணிப்பின் கீழ், பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
அங்கு பல மாணவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி ஏற்றிச் செல்வதை அவதானிக்க முடிந்தது.
கருத்துகள் இல்லை