• Breaking News

    தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு!

     



    யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.

    குறித்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் இந்த நினைவஞ்சலி நடத்தப்பட்டது.

    இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,  தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் யாழ்.மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட அரசியல் பிரதிநிதிகளும் பொது மக்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

    1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின் போது வன்முறைக் கும்பலொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad