• Breaking News

    "புஷ்பா" படத்தில் நிர்வாணக் காட்சி! இயக்குனர் அதிர்ச்சித் தகவல்!

     பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிநடை போடும் திரைப்படம் தான் புஷ்பா.

    தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் பஹத், பிரகாஷ் ராஜ் என பிரபலமான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

    இத்திரைப்படத்தின் “சாமி சாமி” பாடல் வெளியாகி ஒரு கலக்கு கலக்கி வந்த நிலையில் “ஓ…சொல்றியா மாமா” பாடல் சமந்தாவின் கலக்கல் கவர்ச்சி நடனத்துடன் வெளியாகி இளசுகளை ஆட்டம் போட வைத்திருக்கிறது.

    புஷ்பா திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திலேயே 247 கோடி வசூல் சாதனை படைத்து தொடர்ந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அதன் இயக்குனர் சுகுமார் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    கதாநாயகன் அல்லு அர்ஜுனும் வில்லன் பஹத்தும் நிர்வாணமாக சண்டை போடுவது போன்ற காட்சியை படமாக்க நினைத்திருந்ததாகவும் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கருதியதால் காட்சியமைப்பை மாற்றியதாக தெரிவித்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad