சைவ மகா சபையின் “அன்பேசிவம்” விருது யாழ் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபருக்கு!
தைப்பூச தினத்தில், கடந்த சிவராத்திரியில் அகில இலங்கை சைவ மகா சபையால் அறிவிக்கப்பட்ட அன்பேசிவம் விருதானது புகழ் பூத்த மனிதநேய சமூக செயற்பாட்டாளரும் மூத்த கல்வியியலாளருமாகிய யாழ். இந்துக் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் சிவத்திரு. அப்பாத்துரை பஞ்சலிங்கம் அவர்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளதாக சைவ மகாசபை அறிவித்துள்ளது.
2019 தைப்பூசம் அன்பே சிவம் விருது மனிதநேய மருத்துவர் மகப்பேற்று நிபுணர் சரவணபவனிற்கு வழங்கப்பட்ட நிலையில் 2020 கொரோனா பேரிடர் காரணமாக விருது வழங்கப்படாமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை