• Breaking News

    புலமைப்பரிசில் பரீட்சை எழுத சென்று கண்ணீருடன் வீடு திரும்பிய மாணவர்கள்

     கோவிட் தொற்று நோயிற்கு மத்தியில் பல முறை பிற்போடப்பட்ட 2021ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசீல் பரீட்சை நேற்று இடம்பெற்றது.

    அதற்கமைய நேற்றைய தினம் பரீட்சைக்கு முகம் கொடுத்த பல பிரதேசங்களின் மாணவர்கள் கண்ணீருடன் அழுது புலம்பிய நிலையில் பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியே வந்துள்ளனர்.

    வெலிமடை கல்வி வலயத்திற்குட்பட்ட விஜயா கல்லூரியில் நடைபெற்ற பரீட்சை நிலையத்தில் முதல் வினாத்தாள் உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உரிய நேரத்தில் சேகரிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

    இதனால், பரீட்சைக்கு விடையளிக்க போதிய அவகாசம் இல்லாததால், மாணவர்கள் பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியே வந்து அழுது புலம்பியதாக தெரியவந்துள்ளது.

    சில மாணவர்கள் விடை எழுதும் போது வினாத்தாளை பறித்து சென்றதாகவும் மேலதிக தாள் கேட்ட மாணவர்களை கடுமையாக திட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

    இதன் காரணமாக நீதி கோரி பெற்றோர் வெலிமடை - பதுளை பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 150 மாணவர்கள் இந்த நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

    சம்பவம் தொடர்பில் பெற்றோர்கள் வெலிமடை வலயப் பணிப்பாளர் ரோஹித அமரதாசவைச் சந்தித்துப் பேச முயற்சித்த போதிலும் முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

    இதேவேளை, நாகொட ஆரம்ப பாடசாலையிலும் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதைாக தகவல் வெளியாகியுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad