யாழ்ப்பாணத்தில் தை பொங்கல் பொருள் கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை! வியாபாரிகள் கவலை
திருநெல்வேலி சந்தை பகுதியில் வழமையாகப் பொங்கல் தினத்திற்கு முதல் நாள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் வீதி முழுவதும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படும் நிலையில் இம்முறை தைப்பொங்கலுக்குப் பொருட்கள் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழர்களின் திருநாளாகிய தைப்பொங்கல் திருநாள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் பொதுமக்கள் வழமைபோல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் நாட்டம் காட்டவில்லை.
யாழில் வழமையாக இடம்பெறும் வியாபாரத்தைப் போல இம்முறை பொங்கல் வியாபாரம் இடம்பெறவில்லை என தற்போது விலைவாசி அதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக மக்கள் இம்முறை பொங்கல் பொருள் கொள்வனவில் அதிக நாட்டம் காட்டவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நல்லூர் பிரதேச சபையினால் திருநெல்வேலி பகுதியில் வழமையாகப் பொங்கல் தினத்திற்கு முதல்நாள் சன நெருக்கடி ஏற்படுவதன் காரணமாக இம்முறை சனக்கூட்டத்தை தவிர்க்கும் முகமாக நல்லூர் பிரதேச சபையினர் திருநெல்வேலி சந்தையின் முன் வீதியினை ஒரு வழிப்பாதையாக அறிவித்திருந்த நிலையிலும் கூட பொதுமக்கள் தைப்பொங்கலுக்கான பொருட்கள் கொள்வனவு செய்வதில் நாட்டம் காட்டவில்லை என கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை