• Breaking News

    பிரதேச சபையின் செயலாளரை அச்சுறுத்திய வரை கைது செய்யுமாறு கோரி போராட்டம்!

     


    வலி. கிழக்கு பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்யுமாறுகோரி இன்று பிரதேச சபையின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    கடந்த சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதில்  அமைக்கப்படுவது  தொடர்பில் கிடைக்கப்பெற்ற  முறைப்பாடு தொடர்பில் பார்வையிடுவதற்கு, செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்  அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.

    முறைப்பாட்டுடன் தொடர்புடையவர் செயலாளரை அச்சுறுத்தி, அவருடைய கைத்தொலைபேசியை பறித்து உடைத்து, தொலைபேசியை எடுத்து சென்றுள்ளார் இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

    எனினும் குறித்த நபர் வெளிநாட்டு பிரஜை எனவும் தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும் கூறப்பட்டது.

    அந்தவகையில் குறித்த நபரை உடனடியாக கைது செய்யுமாறுகோரி இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad