• Breaking News

    கனடாவில் தமிழ் இளைஞனும் மாயம்!


     கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவரும் காணாமற் போயுள்ளதாக ரொறன்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    யோசாந்த் ஜெகதீஸ்வரன் (29) என்ற இளைஞரே காணாமற் போனவராவார். கடைசியாக ஜனவரி 15, 2022 அன்று மதியம் 12:10 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ட்ரெத்வீ டிரைவ் பகுதியில் காணப்பட்டார்.

    குட்டையான கருப்பு முடி, தாடி மற்றும் பழுப்பு நிற கண்களுடன் காணப்படுகிறார். அவர் கருப்பு நிற குளிர்கால ஜாக்கெட், அணிந்திருந்தார்.

    அவர் கடைசியாக சிவப்பு நிற CFMK 918 என்ற உரிமத் தகடு கொண்ட சாம்பல் நிற டொயோட்டா கேம்ரியை ஓட்டிச் சென்றுள்ளார்.

    இதேவேளை காணாமற்போனதாக கூறப்படும் பிரசாந்தி அருச்சுனன் என்ற யுவதி இவருடன் இருக்கலாம் என கனேடிய விசாரணையாளர்கள் நம்புகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad