தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் விடுதலைப் பொங்கல்!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, யாழில் விடுதலை பொங்கல் என்ற பெயரில் பொங்கல் நிகழ்வு ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.
இந்த பொங்கல் நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் முற்றவெளியில் இடம்பெற்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழர் தரப்பு பல அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.
இந்த நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலை பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
யாழ் முற்றவெளிப் பகுதியில் குறித்த கவனயீர்ப்பு பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சிறைக் கூண்டு போன்ற மாதிரி வடிவமைக்கப்பட்டு அதற்குள் பொங்கல் செய்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது அரசியல் கைதிகளின் உறவுகள், மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை