கடும் குளிரால் மலையகத்தில் ஒருவர் மரணம்!
மலையகத்தில் குளிர் காரணமாக ஒருவர் மரணமான சம்பவம் பதிவாகியுள்ளது.
நல்லத்தண்ணி காவல்துறையினர் இதனை உறுதிச்செய்துள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் சிவனடிபாதமலைக்கு தரிசிக்க சென்ற மினுவாங்கொட பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சமாரா மாலதி என்ற பெண்ணே அதிக குளிர் காரணமாக மரணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகவீனம் அடைந்த நிலையில் நல்லதண்ணி நகரிலிருந்து, அவசர நோயாளர் காவு வாகனத்தின் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது பிரேத பரிசோதனை இன்றே நடைபெற உள்ளது என நல்லதண்ணி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, மலையகத்தின் நுவரேலிய உட்பட்ட பல பகுதிகளிலும் தற்போதைய காலநிலையில் கடும் குளிர் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை