திடீரென தீ வைத்துக்கொண்ட நபரால் பரபரப்பு - காவல்துறையினர் வெளியிட்ட காரணம்
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற ஒருவர், தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளதாக நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நல்லத்தண்ணி பகுதியில் இன்றைய தினம் அதிகாலை 3.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சிவனொளிபாத மலைக்கு 36 யாத்திரிகர்களுடன்பேருந்து ஒன்றில் வருகைத்தந்த குழுவிலுள்ள ஒருவர் சமையல் செய்வதற்காக பேருந்தில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார்.
குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நல்லத்தண்ணி காவல்துறையினர் இணைந்து, காயமடைந்த நபரை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
டிக்கோயா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நபருக்கு, சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தீ வைத்துக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை