அமைச்சர்கள் பதவிகளை இழக்க நேரிடும்! ஜனாதிபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை!
அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் அமைச்சர்கள் பதவியை இழக்க நேரிடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இந்த விடயம் குறித்து திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து கொண்டே அரசாங்கத்தை விமர்சனம் செய்வோர், பதவி விலகி எதிர்க்கட்சிக்கு சென்று அங்கிருந்து எதிர்க்கட்சியின் பணிகளை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு செய்யாது அரசாங்கத்தை விமர்சனம் செய்தால் அவர்களை பணி நீக்க தயங்கப்போவதில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக இன்று அறிவித்துள்ளார்.
மிகவும் நெருக்கடியான தருணத்தில் அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் மக்கள் மத்தியில் அரசாங்கம் குறித்த நல் அபிப்பிராயத்தை கட்டியெழுப்புவதற்கு பதிலாக சிலர் எதிர்மறை விமர்சனங்களை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சனம் செய்வோரை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிராக ஐம்பது லட்சம் பேர் வாக்களித்துள்ளதாகவும் அவர்களுடன் இவ்வாறானவர்கள் இணைந்து கொள்வதனால் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி கடுந்தொனியில் இந்த விடயத்தை குறிப்பிட்டபோது அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த விமல், உதய, வாசுதேவ போன்றவர்கள் மௌனம் காத்தனர் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றதுடன், அந்தக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை