• Breaking News

    மின்சாரம் தடைப்பட்டவேளை யாழில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த திருட்டு கும்பல் சிக்கியது வசமாக!

     


    யாழ். கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்களில் இருவர் அயலவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு , காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

    கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றினுள் நேற்றையதினம் (06) இரவு 09.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளை மூவர் அடங்கிய திருட்டுக்கும்பல் புகுந்துள்ளது.

    அதனை அவதானித்த அயலவர்கள், குறித்த வீட்டின் வெளியில் சுற்றி வளைத்து மூன்று திருடர்களையும், மடக்கிப் பிடிக்க எத்தனித்த போது, ஒருவர் தப்பியோடிய நிலையில், இருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.


    மடக்கிப் பிடிக்கப்பட்ட இருவரும் சுன்னாகம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இருவரையும் கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad