அமெரிக்காவில் பிறந்த அதிசய இரட்டையர்கள்!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில், பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ தம்பதியருக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.
குறித்த இரட்டை குழந்தைகள் பிறந்த நேரம் வித்தியாசமாக அமைந்துள்ளது.
அதாவது முதல் குழந்தை டிசம்பர் 31 2021 இரவு 11.45மணிக்கும், இரண்டாவது குழந்தை சரியாக நள்ளிரவு 12 மணிக்கும் பிறந்துள்ளது.
இதனால், 15 நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் வருடமே மாறிப்போய் உள்ளதாகவும்,இது அரிதான நிகழ்வு என்றும் கூறப்படுகின்றது.
கருத்துகள் இல்லை