நிறுத்தி வைக்கப்பட்ட பேரூந்து சாரதிக்கு மேல் ஏறி சாரதி பலி!
தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தெஹியோவிட்ட பழைய பஸ், தரிப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதிக்கு மேல் ஏறி சாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தனியார் பஸ் வண்டி ஒன்று நேற்று காலை 5.30 மணி அளவில் ஓட்டுனர் பாஸ் செலுத்துவதற்கு முயற்சித்தபோது பஸ் வண்டி ஸ்டார்ட் செயல்படாத நிலையில் பஸ் வண்டியின் சாரதி பஸ் வண்டியின் கோலாரினை திருத்த முற்பட்டபோது பஸ்சுக்கு அடியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கலபிட்டமட இம்புள்கோட பிரதேசத்தை சேர்ந்த மெடிவில ஆசாரிகே சானக துலிப் விஜேவங்ச 25 வயது உடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இறந்தவரின் சடலம் மரண பரிசோதனைக்காக அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை