சங்கானை சந்தை வியாபாரிகள் போராட்டம்! : முடங்கின சந்தை நடவடிக்கைகள்!
இன்று காலை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சங்கானை மரக்கறி சந்தை வியாபாரிகள் மற்றும் வெற்றிலை சந்தை வியாபாரிகள் ஆகியோர் இணைந்து பாரியதொரு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதனால் சந்தை நடவடிக்கைகளும் முற்றுமுழுதாக பாதிப்படைந்தது.
வலி. மேற்கு பிரதேச சபையினால் விதிக்கப்படும் வரிகள் அதிகரிப்பு தொடர்பிலும் சந்தையில் உள்ள சுகாதார சீர்கேடுகள் தொடர்பிலும் குறித்த எதிர்ப்பு பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பில் சந்தை வியாபாரிகள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சங்கானை மரக்கறி சந்தை மிகவும் பழமை வாய்ந்த ஒரு வியாபார பொருளாதார நிலையமாகும்.
இக்கட்டான சூழ்நிலையில் சூழ்நிலைகளில் மரக்கறிகளின் பிள்ளைகள் மட்டுமன்றி அத்தியவசிய பொருட்களின் கட்டணங்களும் அதிகரித்த வண்ணமுள்ளன.
வியாபாரிகள் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் கொள்வனவு செய்யும் எந்த ஒரு மரக்கறி வகைகளும் கழிவுகள் வழங்கப்படுவதில்லை முன்னைய காலங்களில் மரக்கறிகள் மிகவும் குறைவாகவே இருந்து வந்துள்ளது. அன்றைய நிலைமைகளில் சந்தேகங்களுக்கான பரிகள் கொடுப்பதில் எனக்கு எந்தவிதமான நெருக்கீடுகள் இருந்ததில்லை ஆனால் தற்போது மரக்கறிகளின் விலை உயர்வும் ஏட்டில் செலவும் அதிகரித்து காணப்படுவதுடன் சந்தையில் இடத்திற்கான வரி மற்றும் மரக்கறி மீதான வரிகள் கூடிய அளவிலான விடப்படுவதால் நாம் பெரிதும் பாதிப்படைந்து உள்ளோம்.
மேலும் பெருமையால் மரக்கறிகளை அதி கூடிய விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டு இதனால் பாதிக்கப்படுவது வியாபாரிகளான நாங்களும் நுகர்வோரும் எதிர்ப்பாளர்களால் அறவிடப்படும் அதிகூடிய வரியினால் பொருட்களின் விலை அதிகரித்து சந்தைக்கு வரும் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வெறும் மரக்கறி சந்தைக்கு சென்று குறைந்த விலையில் மரக்கறிகளை கொள்வனவு செய்து வருகிறார்கள் இதனால் நாம் மேலும் மேலும் நெருக்கடிகளை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளோம்.
ஆகவே தம்புள்ளை மத்திய பொருளாதார நிலையத்தில் இருந்து கொண்டு வரும் பொருட்களுக்கு இரண்டுவீத வரியும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு தங்கள் சபையால் தீர்மானிக்கப்பட்டதனை மீறாத பட்சத்தில்
மக்களுக்கான விலை அதிகரிப்பு ஓரளவு குறைத்துக் கொள்வதுடன் நமக்கு கிடைக்கக்கூடிய சராசரி வருமானத்தையும் நிலைநாட்ட முடியும்.
மேலும் இடத்துக்குரிய வரி தங்கள் சபையால் 50 ரூபாய் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்தொகை 05.02.2022 அன்றிலிருந்து 60 ரூபா அறவீடு செய்வதற்கு ஆரம்பிக்கப்பட்டது.
ஆனாலும் அது வியாபாரிகளின் தலையீட்டினால் அதிகரித்து நிறுத்தப்பட்டது. இதனையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பொருட்கள் காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்கு அதற்கான வியாபாரம் மேடைகள் அமைக்கப்பட்டு இருந்தது ஆனால் தற்போதைய நிலைமை காரணமாக சுகாதாரப் பிரிவினரின் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளுக்கு அமைவாக வியாபார முறைகள் போதிய அளவில் இடைவெளி அமைக்கப்பட்டுள்ளது இதன் காரணமாகத்தான் வெற்றிலைகளை பழக்கடைகள் பழைய மீன் சந்தைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய குத்தகைகாரர் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி போதிய அளவில் இருப்பதால் மேலும் வியாபாரிகளை உள்வாங்குவதற்கு எடுத்துள்ளார். எனவே மேற்படி விடயங்களை ஆராய்ந்து சந்தை வியாபார நடவடிக்கைகளை பாதிக்காத வகையில் நல்லதொரு தீர்வினை உடனடியாக தெரிவியுங்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை