கோட்டாபய அரசாங்கம் பெற்றுக்கொண்ட பெருந்தொகையான கடன்! வெளியானது பட்டியல்
கடந்த இரண்டு வருடங்களில் இலங்கைப் பெற்றுக் கொண்ட கடன் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மாத்திரம் 5,187.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இது தொடர்பான பட்டியலொன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தகவலின் பிரகாரம், 2020ம் ஆண்டு 1,875 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையும், 2021ம் ஆண்டு 3,312.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையும் இலங்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை