• Breaking News

    கொழும்பில் ஒரே நாளில் மட்டும் மூன்று மனித சடலங்கள் மீட்பு! - விசாரணைகள் தீவிரம்

     


    கொழும்பில் இன்று மாத்திரம் இதுவைரையில் மூன்று மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    ஏற்கனவே இன்று முற்பகல் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையோரங்களில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த சடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தற்போது கொலன்னாவ பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் உள்ள எண்ணெய் கால்வாயில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.

    எனினும், குறித்த சடலமும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அவர்கள் கூறினர். இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் எமது செய்தி சேவைக்கு மேலும் தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad