ஆட்டுக்குட்டிக்கு குழை வெட்டச் சென்ற சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு - யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் பகுதியில் சிறுமி ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கரணவாய் அண்ணா சிலையடியைச் சேர்ந்த ஜெகன் கஜனிகா எனும் 16 வயதான சிறுமியே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (18) மாலை நிகழ்ந்துள்ளது.
தான் வளர்க்கும் ஆட்டிற்கு குழை வெட்டுவதற்காக கிணற்றுக் கட்டில் ஏறிய போதே சிறுமி தவறி கிணற்றில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டுசென்ற போதும் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை