• Breaking News

    தீ மிதிப்பில் பங்கேற்ற இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு!

     


    கொழும்பு - ஆமர் வீதியிலுள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற வருடாந்த தீ மிதிப்பு உற்வசத்தில் கலந்து இளம் தாய் ஒருவர், தீயால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழ்ந்துள்ளார்.

    கெசல்வத்தை பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்குருவிட்ட ஆராச்சிகே இரேஷா மதுரங்கனி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்தார்.

    ஆமர் வீதியிலுள்ள குறித்த ஆலயத்தின் வருடாந்த தீ மிதிப்பு நிகழ்வு கடந்த 14ஆம் திகதி இரவு இடம்பெற்றது.

    குறித்த பெண் தீமிதிப்பு நிகழ்வில் கலந்துகொண்டபோது கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டன.

    தீக்காயங்களுக்கு சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்த பெண், கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

    தொடர் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad