• Breaking News

    நாட்டில் மீண்டும் முடக்க நிலை அறிவிக்க நேரிடும்! சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

     


    மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் நாடு தழுவிய ரீதியில் முடக்க நிலை அறிவிக்க நேரிடும் என சுகாதார அமைச்சு எச்சரிக்க விடுத்துள்ளது.

    நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பொறுப்புணர்ச்சியற்ற வகையில் செயற்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

    சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

    சிலரின் செயற்பாடுகள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad