• Breaking News

    வடக்கில் மீண்டும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு! மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு


     வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


    இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

    கடந்த இரண்டு வாரங்களில் 4 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. நாடு பூராகவும் கொரோனா அதிகரிப்பு காணப்படுகின்றது. அதேபோல் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

    வடக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துச் செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

     ஜனவரி மாதம் நேற்று வரை வடக்கு மாகாணத்தில் 726 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் நாளொன்றுக்கு 10 பேர் மட்டும் இனங்காணப்பட்டுவந்த நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு தினமும் 60 தொடக்கம் 70 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்படுகின்றார்கள்.

    ஒமிக்ரோன் நோயானது உலக நாடுகளில் தீவிரமாக பரவி வருகின்றது இந்த சூழ்நிலையில் எங்களுடைய நாட்டில் தற்போது மேல் மாகாணத்திலும் மேலும் பல மாகாணங்களிலும் வேகமாக பரவி வருகின்றது. ஆகவே பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    இந்த சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொள்ள இருக்கின்ற ஒரே ஒரு பாதுகாப்பான விடயம் பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதுதான். முதல் இரண்டு தடுப்பூசியினை பலரும் பெற்ற போதிலும் மூன்றாவது போஸ்டர் தடுப்பூசியினை பெறாமையின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அற்ற நிலையில் வேகமாக கொரோனா நோய் தொற்றகூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது.

    எனவே தற்பொழுது நாடு பூராகவும் நிறைவேறும் குணா நோய் தாக்கத்திலிருந்து வடக்கு மாகாண மக்கள் தங்களைப் நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியினை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad