யாழ். பல்கலைக்கழக வாயில்களையும் மூடி மாணவர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாயில்களை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமக்கான மாணவர் ஒன்றியத்தை உடனடியாக அங்கீகரிக்க கோரி மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் பெருந்திரளான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று காலை 8 மணி முதல் மாணவர்கள் இந்த மறியல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவாயில்களையும் மூடி இன்று காலை மாணவர்கள் பாரிய முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த பல மாதங்களாக செயலிழந்து கிடக்கும் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தை அங்கீகரிக்குமாறுகோரி, இன்று காலை தொடக்கம் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதன் காரணமாக பல்கலைக்கழக ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்நுழைய முடியாத நிலையேற்பட்டிருக்கின்றது.
இதனையடுத்து பல்கலைக்கழகத்திற்குச் சென்ற துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா, இன்றைய தினம் பரீட்சைகள் நடந்துகொண்டிருப்பதால் வாயில் கதவை திறக்கும்படியும், பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் மாணவர்களிடம் கூறியிருந்தார்.
எனினும் எழுத்தில் முன்வைத்த கோரிக்கைகளே 4 மாதங்களாக எடுக்கப்படவில்லை. என கூறி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை