• Breaking News

    இறந்த மகனை உயிர்ப்பிக்க பெற்றோர் செய்த காரியம்! - தாய்க்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

     


    படல்கம - ஆண்டிமுல்ல பகுதியில் அழுகிய நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுவனின் தாயை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அத்துடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் பாட்டி ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. இதன்படி, சிறுவனின் தாயை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    படல்கம - ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் நேற்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.


    அதன்போது, அவ்வீட்டில் உள்ள அறையொன்றில் இருந்து 10 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

    இச்சிறுவன் கடந்த 7 நாட்களாக தொண்டையில் சளி அடைப்பட்டதால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது பெற்றோர் எவ்வித மருத்துவ சிகிச்சைக்கும் சிறுவனை அழைத்துச் சென்றிருக்கவில்லையென தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், குறித்த சிறுவனின், பெற்றோர் அவரை அறையொன்றில் வைத்து நோய் குணமாகும் வரை பிரார்த்தனைகளை நடத்தியிருந்த நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

    அதன்பிறகு, சிறுவனை மீண்டும் உயிர்ப்பிப்பதாக அவரது பெற்றோர் தொடர்ந்தும் சமயப் பிரார்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்நிலையிலேயே, குறித்த சம்பவம் தொடர்பில் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad