யாழ். குருநகரில் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு!
நேற்றையதினம் (12) யாழ். குருநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த சமையல் எரிவாயு அடுப்பானது வெடித்துச் சிதறியுள்ளது.
சமையல் வேலைகளை முடித்து விட்டு அடுப்பை அணைத்து வைத்த பின்னரே இவ்வாறு வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் சம்பவம் நிகழ்ந்த வேளை அருகில் எவரும் இல்லாமையினால் அசம்பாவிதங்கள் எவையும் ஏற்படவில்லை என அறியமுடிகின்றது.
கருத்துகள் இல்லை