• Breaking News

    யாழ். பல்கலையில் ஆங்கில மொழி ஆய்வுகூடம் திறந்துவைப்பு!

     


    எஹெட் திட்டத்தின் ( Accelerating Higher Education Expansion and Development - AHEAD ) கீழ் , யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் மனித வள முகாமைத்துவத் துறையில் அமைக்கப்பட்ட ஆங்கில மொழி ஆய்வு கூடம், திறன் விரிவுரை மண்டபம் ஆகியன இன்று (14) நண்பகல் திறந்து வைக்கப்பட்டன.

    பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஆங்கில மொழி ஆய்வு கூடத்தையும், திறன் விரிவுரை மண்டத்தையும் திறந்து வைத்தார்.

    நிகழ்வில் ( AHEAD ) திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ஈ.வை.ஏ. சார்ள்ஸ், சிரேஷ்ட நிர்வாக அலுவலர் கே.கனகரட்ணம், வணிக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாஸன், மனித வள முகாமைத்துவத் துறைத் தலைவர் கலாநிதி ( திருமதி ) ரி.ரவீந்திரன், செயற்றிட்ட இணைப்பாளர் கலாநிதி ஆ.சரவணபவன், செயற்பாட்டு இணைப்பாளர்களான பேராசிரியர் என். கெங்காதரன், கலாநிதி ஜே. றொபின்ஸன், ஆங்கில மொழி கற்பித்தல் துறைத் தலைவர் கலாநிதி எஸ். சண்முகநாதன் மற்றும் விரிவுரையாளர்கள், பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad