இராவணா ஒன்றியத்தால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
அராலி மத்தி மற்றும் அராலி மேற்கு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது இன்றையதினம் (13) முத்தமிழ் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது இராவணா ஒன்றியத்தினால் சுமார் 150 மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கந்தையா இலங்கேஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூகமட்ட அமைப்புக்கள், பெற்றோர்கள், மாணவர்கள், வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை