வேலணை சந்தியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
இன்று (14) மதியம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை சந்தியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினரும் ஊர்காவற்துறை பொலிஸாரும் இணைந்து இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது 24 வயதுடைய குறித்த சந்தேகநபரிடமிருந்து 50 கிராம் எடையுடைய கேரளக் கஞ்சாப் பொதியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை