• Breaking News

    கொழும்பு முதல்வரின் குழுவினர் யாழ். மாநகர சபைக்கு விஜயம்!

     


    கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க மற்றும் அவரது குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

    அவர்கள் இன்றும் நாளையும் யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல உள்ளனர்.

    அந்தவகையில் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வருகை தந்த கொழும்பு மேயரது 75 பேர்கொண்ட குழுவினர், இன்று 12 மணியளவில் யாழ். மாநகர சபைக்கு விஜயம் செய்தனர்.

    இதன்போது யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சபைக்கு வருகை தராஊ நிலையில் பிரதி மேயர் துரைராஜா ஈசன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

    இதன்போது கொழும்பு பிரதி மேயர் எம்.டி.எம். இக்பால் மற்றும் யாழ்.  பிரதி மேயர் துரைராஜா ஈசன் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad