• Breaking News

    யாழில் வழமையான செயற்பாடுகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்குமாறு அரச அதிபர் பணிப்பு!

     


    யாழ்ப்பாண மாவட்டத்தில் வழமையான செயற்பாடுகளுக்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் யாழ். மாவட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினருக்கு அறிவுறுத்தி யுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    யாழ். மாவட்டத்தில் எரிபொருள் பொது மக்களுக்கு வழமைபோன்று விநியோகிக்கப்பட்டு வருகின்றது காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்தில் தேவையான போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

    தேவையான அளவு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது எனவே பொதுமக்கள் முண்டியடித்து சேமித்து வைத்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த தேவையில்லை. அத்தோடு வழமைபோன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

    எனவே செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் அத்தோடு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் பொதுமக்களின் வழமையான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கான எரி பொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதோடு ஏனைய பதுக்கல், சேமித்து வைக்கும் முகமான கொள்வனவிற்கு எரிபொருளை விநியோகிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad