• Breaking News

    சமுர்த்தி பயனாளிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சி தகவல்!

     


    28 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கல், நாளை முதல் ஆரம்பிக்கப்படுவதாக விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

    அநுராதபுரத்தில் வைத்து இன்றையதினம் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை  தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

    இதன்படி, தற்போதுவரையில் 3,500 ரூபாவைப் பெற்ற சமுர்த்தி பயனாளர் குடும்பம் ஒன்றுக்கு, 4,500 ரூபா கொடுப்பனவு கிடைக்கப்பெறும்.

    2,500 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பத்துக்கு, 3,200 ரூபா கொடுப்பனவும், 1,900 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பத்துக்கு 2, 500 ரூபா கொடுப்பனவும் கிடைக்கும்.

    இதற்கமைய, எந்தவொரு சமுர்த்தி பயனாளியும், சமுர்த்தி வங்கி மூலம், நாளைமுதல் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad