யாழ். ஸ்டான்லி வீதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
இன்று (12) இரவு 9 மணியளவில், யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டான்லி வீதி பகுதியில் வைத்து 22 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மதுவரி திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நிதிமன்றில் முற்படுத்துவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை