தொடரும் சீரற்ற காலநிலை! வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்புக்கள்!
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நேற்று முதல் பெய்து வருகின்ற தொடர் அடை மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் மற்றும் வயல் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.
திருகோணமலை , கிண்ணியா, தம்பலகாமம் பாலம்போட்டாறு மற்றும் பத்தினிபுரம் உட்பட பல கிராமங்கள் இதன் காரணமாக நீரினால் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
நாளாந்த சில தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்ததால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை