நுவரெலியா பிரதேச செயலக வர்த்தமானியை நிறைவேற்று - கையெழுத்து போராட்டம்!
நுவரெலியாவில் பிரதேச செயலகத்தை அதிகரிப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானியை நடைமுறைப்படுத்துமாறு கோரி மலையக தமிழ்மக்களுக்கு ஆதரவாக சமூக விஞ்ஞான மன்றத்தின் கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த கையெழுத்து போராட்டத்தில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தமது கையெழுத்துக்களை இன்றைய தினம் திங்கட்கிழமை பதிவு செய்தனர்.
கருத்துகள் இல்லை