யாழ். பல்கலைக்கழக போராட்டத்தில் "மாணவர் ஒன்றியமும் மண்ணாங்கட்டியும்" என கத்திய ஊடகத் துறை பேராசிரியர்!
யாழ். பல்கலைக் கழகத்தின் மாணவர் ஒன்றியம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வேண்டி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அனைத்து வாயில்களையும் மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப் போராட்டமானது இன்று காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது போராட்ட இடத்திற்கு வந்த யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடகத் துறை பேராசிரியர் மாணவர்களை சமரசம் செய்து பல்கலையின் வாயில்களை திறப்பதற்கு முயற்சித்தார். அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் குறித்த பேராசிரியர் "மாணவர் ஒன்றியமும் மண்ணாங்கட்டியும்" என சீறினார்.
பேராசிரியர் கூறிய குறித்த வார்த்தைக்கு மாணவர்கள் தமது பாரிய எதிர்ப்பை வெளிக்காட்டினர். நிலைமைகளை சமாளிக்க முடியாத பேராசிரியர் அவ்விடத்திலிருந்து நழுவிச் சென்றார்.
கருத்துகள் இல்லை