இலங்கையில் இடம்பெற்றது படுகொலை அல்ல, மனிதாபிமான யுத்தமாம் - கண்டுபிடித்தார் உபரதன தேரர்
இலங்கையில் இடம்பெற்ற போரானது மக்களைப் பாதுகாத்து மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட்டது என மொரகொல்லாகம உபரதன தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற தர்ம உபதேச நிகழ்வில், உபதேசம் வழங்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் பெரும் சபிக்கப்பட்ட யுத்தம் நடைபெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுடன், நாட்டின் சகல இராணுவத்தினரதும் ஒத்துழைப்புடன் இந்த நாட்டின் அனைத்து மக்களின் ஆசியுடன் மாபெரும் யுத்தம் முன்னெடுக்கப்பட்டது.
ஆனால், இந்தப் போர் படுகொலை அல்ல. மக்களை பாதுகாத்து மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட்டது என்றார்.
கருத்துகள் இல்லை