வட்டியிலான கடன் வழங்கும் ஆரம்பநிகழ்வு யாழில்!
ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” எனும் எண்ணக்கருவிற்கு அமைய சமுர்த்தி பயனாளிகளுக்காக அரசினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி மானியத்தொகை, குறைந்த வட்டியிலான கடன் வழங்கும் ஆரம்பநிகழ்வு யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட யாழ். நகர் கிழக்கு சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது.
2022 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கு இணங்க நாடு பூராகவும் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுவரும் நிலையில் யாழ். மாவட்டத்திற்குரிய நிகழ்வு இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் யாழ்ப்பாண பிரதேச செயலர் ஆகியோர் கலந்துகொண்டு அதிகரிக்கப்பட்ட மானிய தொகை,மற்றும் கடன் தொகையினை சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.
கருத்துகள் இல்லை