காரைநகரில் பெருமளவான சாராயப் போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - களபூமி பகுதியில் 125 கால் சாராய போத்தல்களுடன் 64 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சித்தங்கேணி மதுவரி நிலையத்தினர் இணைந்து இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
குறித்த நபர் வீட்டில் வைத்து சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தற்போது சித்தங்கேணி மதுவரி நிலையத்தினரின் கண்காணிப்பின் கீழ் உள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை