புதுக்குடியிருப்பு நபருக்கு அடித்தது அதிர்ஷ்டம்! இலட்சக்கணக்கில் கிடைத்த பணம்
தேசிய லொத்தர் சபையின் லொத்தர் சீட்டு மூலம் புதுக்குடியிருப்பில் பத்து இலட்சம் ரூபா வெற்றிகொள்ளப்பட்டுள்ளது.
அதகோடிபதி என்ற கடந்த 05.02.2022 அன்று குலுக்கப்பட்ட சீட்டில் புதுக்குடியிருப்பு - கோம்பாவில் பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் பத்து இலட்சம் ரூபாவை வெற்றி கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இது தொடர்பிலான பதாதையொன்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை, தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி, மாங்குளம், மல்லாவி, விசுவமடு, உடையார்கட்டு நகர் பகுதியில் லொத்தர் சீட்டு விற்பனை அதிகளவில் பதிவாகி வருவதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை