• Breaking News

    யாழுக்கு வருகின்றார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி!

     


    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள், எதிர்வரும் ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணம் வருகிறார்.

    ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 20ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான கௌரவ மைத்திபால சிறிசேன அவர்கள் யாழ். மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

    இதன்போது, யாழ் மாவட்ட மக்கள் கடந்த காலத்தில் தமக்கு வழங்கிய ஆதரவை நினைவுகூர்ந்த அவர், யாழ். மாவட்ட மக்களை சந்திப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 20ம் திகதி, பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad