• Breaking News

    தமிழ் பெண்ணை மணக்கும் ஆஸி கிரிக்கெட் வீரர் - வைரலாகும் திருமண அழைப்பிதழ்

     


    அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ஸ்வெல் தமிழ் பெண் வினி ராமன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

    கிளென் மெக்ஸ்வெல் அவுஸ்ரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் அவுஸ்ரேலியாவில் பார்மஸி படித்தவர். இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது.

    அதன்பின்னர் கொரோனா அச்சுறுத்தல், லொக்டவுன் என நெருக்கடியான நிலை தொடர்ந்ததால் அவர்களது திருமணம் தள்ளிப்போனது. இந்த நிலையில் கிளென் மெக்ஸ்வெல், வினிராமன் திருமணம் வரும் மார்ச் 27-ம் திகதி நடைபெற உள்ளது.

    வினி ராமன் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த தமிழ் பெண் என்பதால், இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழ் முறைப்படி அச்சிடப்பட்டுள்ளது.

    தற்போது இந்த அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், மெக்ஸ்வெல் - வினி ராமன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad