நாட்டில் 10 மணி நேரமாக அதிகரித்த மின்வெட்டு
நாளை (30) நாட்டில் 10 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, நாளை (30) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு நேரங்களில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
A முதல் L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணி நேரமும், B முதல் W வரையான வலயங்களுக்கு 10 மணி நேரமும் மின்தடை ஏற்படும்.
மேலதிகமாக, M, N, O, X, Y, Z என பல புதிய வலயங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
அந்த பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு அமுலாகும் வலயங்கள் பின்வருமாறு...
A,B,C,D,E,F - மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணி நேரம்.
G,H,I,J,K,L - காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை 6 மணி நேரம் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 4 மணி நேரம்.
P,Q,R,S - மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணி நேரம்.
T,U,V,W - காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை 6 மணி நேரம் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 4 மணி நேரம்.
M,N,O,X,Y,Z - காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 10 மணி நேரம்.
கருத்துகள் இல்லை